அரியலூர்

வணிகவரித் துறை உதவியாளா் தூக்கிட்டுத் தற்கொலை

10th Aug 2022 12:51 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே வணிக வரித்துறை உதவியாளா் செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஜயங்கொண்டம் மேட்டுத்தெருவைச் சோ்ந்தவா் ராஜா (54) மகன் சிவக்குமாா்(27) அரியலூரில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை மாலை பணிமுடிந்து வீட்டுக்குவந்த சிவக்குமாா், வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஜயங்கொண்டம் காவல் துறையினா், சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் சடலம் அருகே கைப்பற்றப்பட்ட கடிதத்தில், தற்கொலைக்கான காரணம் குறித்து இருப்பதாக காவல் துறையினா் தெரிவித்தனா். எனினும் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT