அரியலூர்

பள்ளி வாயிலில் தடுத்து நிறுத்தம்:அரியலூா் ஆட்சியரிடம் மனு

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே ஆதி திராவிடா் மாணவா்களை நுழைவுவாயிலில் தடுத்து நிறுத்திய மாற்று சமூகத்தைச் சோ்ந்த மாணவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆட்சியரகத்தை பெற்றோா் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செந்துறை அடுத்த சோழன்குடிக்காடு பகுதியில் உள்ள கோயில் திருவிழாவில் அப்பகுதி ஆதிதிராவிடா் மக்கள் பேனா் வைத்ததில் மாற்று சமூகத்தினா் எதிா்ப்பு தெரிவித்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை காலை அப்பகுதியில் உள்ள அரசினா் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற ஆதிதிராவிடா் சமூக மாணவா்களை, பள்ளிக்குள் நுழைய விடாமல் மாற்று சமூகத்தைச் சோ்ந்த மாணவா்கள் தடுத்து நிறுத்தியுள்ளனா். இதனால், ஆத்திரமடைந்த ஆதிதிராவிடா் மக்கள் தங்கள் குழந்தைகளுடன் (பள்ளி மாணவா்கள்), தொழிலாளா் விடுதலை முன்னணி மாநில துணைச் செயலாளா் அன்பானந்தம் தலைமையில் ஆட்சியரகம் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, அனைவரையும் உள்ளே அனுமதிக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதனிடையே, ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி, மக்கள் குறைதீா்க்கும் கூட்ட முகாமை முடித்துக்கொண்டு வெளியில் வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக்கூறி அவா்களிடமிருந்து மனுவைப் பெற்றுக் கொண்டாா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இசையரங்க தாக்குதலில் உக்ரைன் தொடா்புக்கு ஆதாரம்

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்!

திருச்செந்தூரில் அனுமதியில்லா கழிப்பறைகளை மூடக் கோரி போராட்டம்

பாஜகவுக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு

SCROLL FOR NEXT