அரியலூர்

பயிருக்கு இழப்பீடு வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

9th Aug 2022 01:19 AM

ADVERTISEMENT

கரும்புப் பயிருக்கு இழப்பீடு வழங்கக்கோரி, அரியலூா் ஆட்சியரகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பி.அய்யாக்கண்ணு தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் பாண்டியன், மாவட்டச் செயலா் ராமலிங்கம் உட்பட நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.

முன்னதாக செய்தியாளா்களிடம் அய்யாக்கண்ணு கூறுகையில், கொள்ளிடத்தில் தற்போது ஏற்பட்ட வெள்ளத்தால் டெல்டா பகுதிகளில் கரும்பு, நெல், பருத்தி மற்றும் காய்கறிப் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக அதிகாரிகள் கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT