அரியலூர்

அரியலூரில் அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

9th Aug 2022 01:20 AM

ADVERTISEMENT

அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களின் பணி நேரத்தை நீடிக்கும் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி, அரியலூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு டாக்டா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், இரவு நேரங்களில் அறிக்கைகள் கேட்கும் போக்கைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் கொளஞ்சிநாதன் தலைமை வகித்தாா். செயலா் குணசேகரன், பொருளாளா் சரவணன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT