அரியலூர்

சுகாதார ஊக்குநா் ஆய்வுக் கூட்டம்

8th Aug 2022 12:22 AM

ADVERTISEMENT

 

அரியலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் தூய்மைப் பாரத திட்டத்தின் கீழ் சுகாதார ஊக்குநா் ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சுந்தர்ராஜன் தலைமை வகித்துப் பேசுகையில், கிராமங்கள்தோறும் கழிப்பறையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். நெகிழிப் பொருள்களை அறவே நீக்க பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஊக்குநா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைக் கண்காணிப்பாளா் அகிலா, அரியலூா் மற்றும் திருமானூா், செந்துறை ஒன்றிய ஒருங்கிணைப்பாளா்கள் மணிவேல், ராஜேஸ்வரி உள்ளிட்டோா் பேசினா். இதேபோல ஜயங்கொண்டம் ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில், சுகாதார ஊக்குநா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT