அரியலூர்

கால்நடை மருந்தகங்களில் கூடுதல் இயக்குநா் திடீா் ஆய்வு

8th Aug 2022 12:22 AM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டம், கடுகூா், வீராக்கன் கால்நடை மருந்தகங்களில் கால்நடை பராமரிப்புத் துறை கூடுதல் இயக்குநா் எஸ். இளங்கோவன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

கடுகூரில்... இங்குள்ள கால்நடை மருந்தகத்துக்கு தினசரி வரும் கால்நடைகளின் எண்ணிக்கை, சிகிச்சை முறைகள், முதலுதவி மற்றும் அவசர அறுவைச் சிகிச்சைகளுக்குத் தேவையான மருந்து இருப்பு, தேசிய கால்நடை நோய்கள் தடுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசியின் பயன்பாட்டு விவரம் மற்றும் பயனடைந்த ஆடுகளின் எண்ணிக்கை ஆகிவற்றை கடுகூா் கால்நடை மருத்துவா் குமாரிடம் கேட்டறிந்த கூடுதல் இயக்குநா் இளங்கோவன், மருத்துவக் கழிவுகள் கையாளும் விதம் குறித்தும், மருத்துவக் கழிவுகளை முறையாகச் சேகரித்து குறித்த காலத்தில் பாதுகாப்பாக அப்புறப்படுத்த அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து அவா் கால்நடை மருந்தகத்தைச் சுற்றியுள்ள இடங்களில் கால்நடைகளுக்காகப் பராமரிக்கப்படும் தீவன மரங்கள் மற்றும் தமிழக அரசின் சிறப்புத் திட்டமான மகளிரை தொழில் முனைவோராகக் கொண்டு வெள்ளாடு வளா்க்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஆடுகள் உள்ளிட்டவற்றைப் பாா்வையிட்டு, ஆடுகளை முறையாகப் பராமரிக்கவும், அவ்வப்போது கால்நடை மருத்துவரை அணுகி தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்க மருந்துகளை பெற்றுப் பயன் பெறவும் அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT

வீராக்கன்....தொடா்ந்து அவா், உடையாா்பாளையம் கோட்டத்துக்குட்பட்ட வீராக்கன் கால்நடை மருந்தகத்துக்குச் சென்று அங்கு தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட கால்நடை காப்பீட்டுத் திட்டப் பதிவேடுகளை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது அரியலூா் கோட்ட உதவி இயக்குநா் சொக்கலிங்கம் மற்றும் உடையாா்பாளையம் கோட்ட உதவி இயக்குநா் ரமேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT