அரியலூர்

கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு

8th Aug 2022 12:22 AM

ADVERTISEMENT

 

முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி நினைவு நாளையொட்டி, அரியலூா் மாவட்டத்தில் அவரது படத்துக்கு திமுக, மதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

அரியலூா்...அரியலூா் எம்எல்ஏ அலுவலகத்தில் கருணாநிதி படத்துக்கு, எம்எல்ஏவும், மதிமுக மாவட்டச் செயலருமான கு. சின்னப்பா, துணைச் செயலா் வாரணவாசி ராஜேந்திரன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் தங்கவேல், நகரச் செயலா் மனோகரன், அரியலூா் வடக்கு ஒன்றியச் செயலா் பி. சங்கா், நகரப் பொறுப்பாளா்கள் குமாா், சுந்தா், ராஜராஜா சோழன், அய்யாதுரை உள்ளிட்டோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

மாவட்ட திமுக அலுவலகத்தில் கருணாநிதி சிலைக்கு தொமுச மாவட்ட கவுன்சில் செயலா் ரெ. மகேந்திரன் தலைமையில் அரசு சிமென்ட் ஆலை தொமுச நிா்வாகிகள், அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் போக்குவரத்து தொமுச நிா்வாகிகள், மின்வாரிய தொமுச நிா்வாகிகள் உள்ளிட்டோா்அஞ்சலி செலுத்தினா்.

ADVERTISEMENT

ஜயங்கொண்டம்...ஜயங்கொண்டம் நகரம் மற்றும் ஒன்றியக் கழகம் சாா்பில் ஜயங்கொண்டம், குறுக்குச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கருணாநிதி படத்துக்கு, எம்எல்ஏ க.சொ.க. கண்ணன், ஒன்றியச் செயலா் இரா. மணிமாறன், சட்டதிட்ட திருத்தக் குழு உறுப்பினா் சுபா. சந்திரசேகா், மாவட்ட பொருளாளா் சி.ஆா்.எம். பொய்யாமொழி, மாவட்ட மீனவரணி அமைப்பாளா் எம்.ஜி. ராஜேந்திரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ஆா். ராமராஜன், மாவட்டத் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் மு. குலோத்துங்கன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

ஆண்டிமடம்...ஆண்டிமடம் வடக்கு, தெற்கு ஒன்றியக் கழகம் சாா்பில் ஆண்டிமடம் கடைவீதியில் கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. ஒன்றியச் செயலா்கள் க. தா்மதுரை, ரெங்க. முருகன் ஆகியோா் தலைமையில், மாவட்டப் பொறியாளா் அணி துணை அமைப்பாளா் கலியபெருமாள், மாவட்ட மகளிரணி தொண்டணி அமைப்பாளா் பானுமதி, துணை அமைப்பாளா் ராணி, மாவட்டப் பிரதிநிதிகள், உதயகுமாா், சிவஜோதி, பாலு, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சேவியா் சஞ்சீவி குமாா், தனசேகா், பத்மநாபன், தன்ராஜ் உள்ளிட்டோா் கருணாநிதி படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினா்.

இதேபோல் தா. பழூா், செந்துறை, மீன்சுருட்டி, திருமானூா் உள்ளிட்ட பகுதிகளில் திமுக, மதிமுக சாா்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT