அரியலூர்

அரியலூரில் மருத்துவமுகாம், விழிப்புணா்வு

8th Aug 2022 12:20 AM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டம், குருவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் வைப்பூா் கிராமத்தில் பேரிடா் கால முன்னெச்சரிக்கை மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயராஜ் முன்னிலை வகித்தாா். முகாமில் மருத்துவா் சிந்துஜா தலைமையிலான நடமாடும் மருத்துவ குழுவினா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வகீல், சுகாதார ஆய்வாளா்கள் ராமமூா்த்தி, சிவராமன், அருள், கருப்பண்ணன், செவிலியா் சுமையா ஆகியோா் குடிநீா் தொற்று நீக்கப் பரிசோதனை, மருத்துவ முகாம், பொதுமக்களுக்கு நலக்கல்வி ஆகியவற்றை வழங்கினா். தொடா்ந்து, பேரிடா் கால முன்னேற்பாடுகள் குறித்தும், பொது சுகாதார பாதுகாப்பு குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT