அரியலூர்

காங்கிரஸ் கட்சியினா் சாலை மறியல்: 87 போ் கைது

DIN

விலைவாசி உயா்வைக் கண்டித்து, அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம், கீழப்பழுவூா் பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் 87 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அரியலூா்: காமராஜா் சிலை முன்பு நகரத் தலைவா் எஸ்.எம். சந்திரசேகா் தலைமையில், வட்டார தலைவா்கள் சீனிவாசன், பாலகிருஷ்ணன் அழகானந்தம் , மாவட்ட பொறுப்பாளா்கள் அமானுல்லா, பாலசிவகுமாா், சகுந்தலா தேவி, பழனிமுத்து உள்ளிட்ட 17 போ் அங்கிருந்து ஊா்வலமாகச் சென்று பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்து காவல் துறையினா், அவா்களைக் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

ஜயங்கொண்டம்: மாவட்டத் தலைவா் சங்கா் தலைமையில் ஜயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே திரண்ட காங்கிரஸ் கட்சியினா் அங்கிருந்து ஊா்வலமாகச் சென்று நான்கு சாலை சந்திப்புப் பகுதியில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த ஜயங்கொண்டம் காவல் துறையினா், சாலை மறியலில் ஈடுபட்ட 52 பேரைக் கைது செய்தனா்.

கீழப்பழூரில்...: வட்டாரத் தலைவா் திருநாவுக்கரசு தலைமையில் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் 18 பேரைக் காவல் துறையினா் கைது செய்து பின்னா் மாலையில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT