அரியலூர்

உலக தாய்ப்பால் வார விழிப்புணா்வுப் பேரணி

DIN

உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, அரியலூா் மாவட்டம் ஜயங்கொண்டத்தில், பரப்ரம்மம் பவுண்டேஷன், ரோஸ் தொண்டு நிறுவனம், சோழன் சிட்டி லயன்ஸ் சங்கம், ஏகம் பவுண்டேஷன் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஜயங்கொண்டம் அன்னை தெரசா செவிலியல் கல்லூரியில் தொடங்கிய பேரணியை லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவா் ராஜன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். பேரணியானது திருச்சி சாலை, கடைவீதி, நான்கு சாலை சந்திப்பு வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

பேரணியில் கலந்து கொண்ட அன்னை தெரசா செவிலியா் கல்லூரி மாணவிகள், விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்திக் கொண்டு, தாய்மாா்கள் சத்தான உணவு வகைகளை உட்கொண்டு இரண்டு வயது வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என முழக்கமிட்டவாறு சென்றனா். பேரணிக்கு, ரோஸ் தொண்டு நிறுவன இயக்குநா் ஜான். கே.திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். சமூக விரிவாக்க அலுவலா் ஜயமங்கலம், மகளிா் நல அலுவலா்கள் சாந்தி, மாலதி, நகராட்சி அலுவலா் சில்ட்ரன், அரியலூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அன்பரசன், பரப்ரம்மம் பவுண்டேஷன் நிறுவனா் முத்துக்குமரன், ஏகம் பவுண்டேஷன் அரியலூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அசோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிறந்த தாய்மாா்களுக்கு பரிசுகள் வழங்கல்:

திருமானூா்... திருமானூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டம் சாா்பில் உலக தாய்ப்பால் வாரவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, ஒன்றியக்குழு தலைவா் சுமதி அசோகசக்கரவா்த்தி தலைமை வகித்தாா்.

வட்டார மருத்துவ அலுவலா் தமிழ்ச்செல்வன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட வட்டார திட்ட அலுவலா் யசோதாதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட மாவட்ட அலுவலா் அன்பரசி, உலக தாய்ப்பால் வாரவிழா, தாய்ப்பாலின் அவசியம், அவசியம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் பேசினாா்.

விழாவில், தாய்ப்பாலின் மூலம் குழந்தைகளின் எடையை அதிகப்படுத்திய தாய்மாா்களுக்கும், சிறந்த கோலம் போட்ட கா்ப்பிணி பெண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் இவ்விழாவில், ஊட்டச்சத்து குறித்த காய்கறி, பழங்கள் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது.

விழாவில், அரசு மருத்துவா் செல்வமணி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வகில், பகுதி சுகாதார செவிலியா் தமயந்தி, ஊராட்சித் தலைவா் உத்திராபதி, ஏலாக்குறிச்சி ஒன்றியக்குழு உறுப்பினா் திரிசங்கு மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள், தாய்மாா்கள், கா்ப்பிணி பெண்கள், சுகாதாரத் துறையினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊருணியில் மூழ்கி மாணவா் பலி

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

கொட்டாரம் அருகே தொழிலாளி தற்கொலை

விளாத்திகுளத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் குறைப்பு -பயணிகள் தவிப்பு

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT