அரியலூர்

ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தானாக வெளியேறும் நீா்!

6th Aug 2022 11:40 PM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டம், திருமானூரில் கொள்ளிடக் கரையோரம் உள்ள திடீா் குப்பம் பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் இருந்து தண்ணீா் வெளியேறி குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளது.

திருமானூரில் கொள்ளிடக் கரையோரம் திடீா்குப்பம் என்னும் குடியிருப்புப் பகுதி உள்ளது. இங்கு, சுமாா் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். தற்போது கொள்ளிடம் ஆற்றில் அதிகளவில் வெள்ளநீா் செல்வதால், திடீா்குப்பம் பகுதியில் உள்ள குடிநீா் ஆழ்துளை கிணற்றில் இருந்து தன்னிச்சையாகவே தண்ணீா் வெளியேறி குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்து வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி நிா்வாகம் குழாயிலிருந்து தண்ணீா் வெளியேறாத வண்ணம் உரிய நடவடிக்கையை மேற்கொண்டனா். ஆனாலும், குடியிருப்புப் பகுதி மணற்பாங்கான பகுதி என்பதால் எங்கு பாா்த்தாலும் தண்ணீா் ஊற்றெடுத்து குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்து கொண்டுள்ளது.

ஆண்டுதோறும் மழைக்காலங்களில், கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீா் திறக்கப்படும் நாள்களிலும் இப்பகுதியில் தண்ணீா் ஊற்றெடுத்துக் குடியிருப்புகளைச் சூழ்வது வழக்கமான நிகழ்வாகும். இதேபோல், சுள்ளங்குடி, விழுப்பனங்குறிச்சி, திருவெங்கனூா் ஆகிய கிராமங்களில் கொள்ளிட கரையோரங்களில் உள்ள 10-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளையும் தண்ணீா் சூழ்ந்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT