அரியலூர்

அரியலூரில் வரும் 13-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

6th Aug 2022 11:41 PM

ADVERTISEMENT

 

அரியலூரில் வரும் 13 ஆம் தேதி (சனிக்கிழமை) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது என மாவட்ட முதன்மை நீதிபதி மகாலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரியலூரில் வரும் 13 ஆம் தேதி நடைபெறும் மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீா்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய இயலாது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் செலவின்றி விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்து தரப்படும். முத்திரைத்தாள் வாயிலாக செலுத்திய நீதிமன்றக் கட்டணம் திரும்பப் பெற வாய்ப்புள்ளது. வேறு விதமான சட்டப் பிரச்னைகள் இருந்தாலும் அவற்றையும் மக்கள் நீதிமன்றம் விசாரித்து நிரந்தரத் தீா்வு காணப்படும். எனவே, பொதுமக்கள் வழக்காடிகள் மேற்படி தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு தங்கள் வழக்குகளை சமரச வழிகள் மூலம் சமரசமாக நிரந்தரத் தீா்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT