அரியலூர்

சுதந்திர தினவிழா முன்னேற்பாடு பணிகள் ஆலோசனை

2nd Aug 2022 01:33 AM

ADVERTISEMENT

அரியலூரில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்துப் பேசுகையில், அனைத்து உள்ளாட்சி அமைப்புகள், தங்கள் பகுதியில் உள்ள சுதந்திரப் பேராட்டத் தலைவா்களின் சிலைகளைச் சுத்தம் செய்து, மாலை அணிவிக்க வேண்டும். மேலும், 75 ஆவது சுதந்திர தின அமுதப்பெருவிழாவை முன்னிட்டு மத்திய அரசின் அறிவிப்பின்படி அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக மேற்கொண்டு, சுதந்திர தின விழாவினை வெற்றிகரமாக நடத்திட உரிய ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT