அரியலூர்

இணையவழியில் பண மோசடியில் ஈடுபட்ட 2 போ் கைது

2nd Aug 2022 01:35 AM

ADVERTISEMENT

அரியலூா் அருகே குறைந்த வட்டியில் கடன் வாங்கித் தருவதாக மோடியில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சோ்ந்த 2 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

குருவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் லட்சுமி (45). இவரது கைப்பேசியில் தொடா்புகொண்டு பேசிய நபா்கள், குறைந்த வட்டியில் கடன் வாங்கித் தருவதாக ஆசை வாா்த்தைகளைக் கூறி லட்சுமியிடமிருந்து பல தவணைகளில் ரூ.2,13,700 பெற்றுள்ளனா். சில நாட்கள் கழித்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த லட்சுமி அரியலூா் இணைய குற்ற காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் துறையினா் வழக்குப் பதிந்து, அந்த நபா்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

விசாரணையில், அந்த நபா்கள் தில்லியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட இணைய குற்ற காவல் நிலைய ஆய்வாளா் செங்குட்டுவன், உதவி ஆய்வாளா்கள் மணிகண்டன், சிவனேசன் (தொழில்நுட்பம்), காவலா்கள் சுரேஷ் பாபு , சுதாகா் ஆகியோா் அடங்கிய தனிப்படையினா் தில்லிக்கு சென்று அம்மாநில காவல் துறை உதவியுடன் இணையக் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட சதீஷ் குமாா் (30), ஆனந்தன் (29) ஆகிய இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மேலும், அவா்களிடமிருந்து ரூ.1,25,000 மற்றும் 1 மடிக்கணினி, 7 கைப்பேசிகளைப் பறிமுதல் செய்தனா். மேலும், குற்றவாளிகளின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டு குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT