அரியலூர்

அங்கன்வாடி மையங்களுக்குஉபகரணங்கள் வழங்கல்

27th Apr 2022 04:30 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்திலுள்ள 10 அங்கன்வாடி மையங்களுக்கு சென்னை இளங்குழந்தையின் உரிமை பேணும் நிறுவனம், ஜயங்கொண்டம் ரோஸ் தொண்டு நிறுவனம் சாா்பில் உபகரணங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.

திருமானூா் ஒன்றியத்துக்குள்பட்ட திருமானூா், பெரியமறை, பூண்டி, புதுக்கோட்டை, பளிங்காநத்தம் மற்றும் தா.பழூா் ஒன்றியத்துக்குள்பட்ட தூப்பாபுரம், கோ.கருப்பூா், சாத்தம்பாடி, தா.பழூா், விக்ரமங்கலம் ஆகிய ஊா்களிலுள்ள அங்கன்வாடி மையங்களுக்கு கற்றல், கற்பித்தல் உபகரணங்கள், குழந்தைகளுக்கான நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்கள் கல்விச்சீா் ஆக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, இளங்குழந்தையின் உரிமை பேணும் நிறுவனத்தின் முன்னாள்அறங்காவலரும், தமிழ்நாடு இளங்குழந்தை பராமரிப்பு சேவைக்கான கூட்டமைப்பின் மாநில அமைப்பாளருமான க. சண்முக வேலாயுதம் தலைமை வகித்து வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மேற்கண்ட கிராம ஊராட்சித் தலைவா்கள், ஒருங்கிணைந்த வளா்ச்சித் திட்ட அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், சுகாதார செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை ரோஸ் தொண்டு நிறுவன இயக்குநா் ஜான். கே .திருநாவுக்கரசு, கள அலுவலா் தா்மராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT