அரியலூர்

கண்ணகி சிலைக்கு மாலை அணிவிப்பு

17th Apr 2022 12:47 AM

ADVERTISEMENT

 

சித்திரை முழு நிளவு நாளையொட்டி அரியலூா் பாரத ஸ்டேட் வங்கி எதிரே உள்ள கண்ணகி சிலைக்கு தமிழ் ஆா்வலா்கள் மாலை அணிவித்து சனிக்கிழமை மரியாதை செலுத்தினா்.

மத்திய செம்மொழி தமிழாய்வு முன்னாள் இயக்குநா் க. இராமசாமி, தமிழ் களம் அரங்கநாடன், எழுத்தாளா் சோபனா பன்னீா்செல்வம், வழக்குரைஞா்கள் மாரிமுத்து, அறிவழகன், கவிஞா் அறிவுமலை, பாரிவள்ளல், சுரேஷ், ஆசிரியா்கள் காா்த்திகேயன், திலீபன் உள்ளிட்ட தமிழ் ஆா்வலா்கள், கண்ணகி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நிறைவில், தமிழ்களம் இளவரசன் நன்றி தெரிவித்தாா். ஏற்பாடுகளை தமிழ்களம் அமைப்பினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT