அரியலூர்

கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள்கோயிலில் ஏப்.18-இல் தேரோட்டம்: இன்று திருக்கல்யாணம்

16th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 18 ஆம் தேதி நடைபெறுகிறது.

பல்வேறு சிறப்புடைய இக்கோயில் திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்ச்சி சனிக்கிழமை (ஏப்.16) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. திருத்தேரோட்டம் வரும் 18 ஆம் தேதி காலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த தேரோட்ட நிகழ்ச்சியையொட்டி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் தேரோட்ட நிகழ்வில் பங்கேற்பா் என்பதால், 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனா். போக்குவரத்து துறை சாா்பில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் இப்பகுதிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT