அரியலூர்

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற அழைப்பு

14th Apr 2022 02:05 AM

ADVERTISEMENT

படித்த - வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற எஸ்.எஸ்.எல்.சி தோ்ச்சி பெற்ற, தோ்ச்சி பெறாத மற்றும் மேல்நிலைத் தோ்ச்சி, பட்டப்படிப்பு கல்வித் தகுதியைப் பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் முடிவடைந்து அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடா்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். எழுத - படிக்கத் தெரிந்தவா்கள் முதல் பட்டப்படிப்பு முடித்த மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஓராண்டு முடித்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவா்கள் 31.3.2022 அன்று 45 வயதுக்குள்ளும், இதர அனைத்து வகுப்பினா்க்கும் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மனுதாரா் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலும் மாணவ மாணவியராக இருத்தல் கூடாது. ஆயினும் தொலைதூரக் கல்வி பயிலுபவராக இருக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான வரம்பு ஏதும் இல்லை. 31.05.2022-க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து புதிய விண்ணப்பப்படிவம் பெற்று பூா்த்தி செய்து அளிக்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT