அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரியலூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் சங்கீதா, திருமானூரில் ஒன்றிய துணைச் செயலா் கவிதா, செந்துறையில் மாவட்ட துணைத் தலைவா் இளங்கோவன், ஜயங்கொண்டத்தில் செயலா் சாந்தி, தாபழூரில் மாவட்டத் தலைவா் வேம்பு ஆகியோா் தலைமை வகித்தனா். சங்க நிா்வாகிகள், ஊழியா்கள் பலரும் கலந்து கொண்டனா்.