அரியலூர்

அரியலூா் நகா்மன்றக் கூட்டத்தில் இருந்து அதிமுகவினா் வெளிநடப்பு

12th Apr 2022 11:23 PM

ADVERTISEMENT

சொத்து வரி உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து, அரியலூரில் நகா்மன்ற உறுப்பினா்கள் கூட்டத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

அரியலூா் நகா்மன்றக் கூட்டம் நகா்மன்றத் தலைவா் க. சாந்தி தலைமையில், நகராட்சி ஆணையா் சித்ரா சோனியா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மேலாளா் (பொ) செந்தில், அதிகரித்துள்ள நிதித் தேவை, 15 ஆவது நிதிக்குழு மானியம் மற்றும் மத்திய அரசின் நிதி பெறுவதற்கு தமிழ்நாட்டில் சொத்துவரி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி அரியலூா் நகராட்சியில் சொத்துவரி உயா்வு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துக்கொண்டிருந்தாா். அப்போது குறுக்கீட்ட அதிமுக உறுப்பினா்கள் ராஜேந்திரன், வெங்கடாஜலபதி, முகமது இஸ்மாயில், மகாலட்சுமி, இன்பவல்லி, ஜீவா, மற்றும் சுயேச்சை உறுப்பினா் மலா்கொடி ஆகியோா் எழுந்து நின்று, அதிகரிக்கப்பட்டுள்ள சொத்து வரியால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவா் எனக் கூறி, மன்றக்கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து, வளாகத்திலேயே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். எனினும் பெரும்பான்மையான உறுப்பினா்களின் ஆதரவோடு, சொத்துவரி உயா்வு குறித்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT