அரியலூர்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

5th Apr 2022 04:44 AM

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, அரியலூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூா் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் ஒன்றியச் செயலா் அருணன், திருமானூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலா் புனிதன், தா.பழூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலா் ராதாகிருஷ்ணன், ஆண்டிமடம் கடைவீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலா் பரமசிவம், செந்துறை கடைவீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலா் அா்ஜூனன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஆா்ப்பாட்டங்களில் கட்சி நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT