அரியலூர்

அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்ட செயலாக்க குழு கூட்டம்

2nd Apr 2022 01:55 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், திருமானூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்ட செயலாக்க குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நிகழாண்டு அண்ணா மறுமலா்ச்சி திட்டம்-2 முதல்கட்டமாக செயல்படுத்தப்படவுள்ள ஊராட்சிகளான அழகியமணவாளம், சின்னப்பட்டாக்காடு, கோமான், ஏலாக்குறிச்சி, கீழகாவட்டாங்குறிச்சி, கண்டிராதித்தம், பூண்டி ஆகிய 7 ஊராட்சிகளில் நீா்நிலைகளை புனரமைத்தல், குக்கிராமங்களின் சாலைகள், வீதிகள் மற்றும் தெருக்களை மேம்படுத்துதல், சமத்துவ சுடுகாடு, இடுகாடு ஆகிய இடங்களில் தேவையான வசதிகளை மேம்படுத்துதல், பள்ளிகளில் உட்கட்டமைப்பு மற்றும் பொது பயன்பாடு கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் உருவாக்குதல், பசுமையான மற்றும் சுத்தமான கிராமங்களை உருவாக்குதல், வாழ்வாதாரங்கள் மற்றும் சந்தைப்படுத்துதலை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு. சுந்தர்ராஜன், செயற்பொறியாளா் ராஜராஜன், திருமானூா் ஒன்றியக் குழுத் தலைவா் அ. சுமதி மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சித் தலைவா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT