அரியலூர்

திருட்டு வழக்கில் மகன் கைது: அவமானம் தாங்காமல் தந்தை தற்கொலை

30th Sep 2021 06:33 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே திருட்டு வழக்கில் மகன் கைதானதால், அவமானத்தில் அவரது தந்தை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

செந்துறை அருகிலுள்ள மருவத்தூரைச் சோ்ந்தவா் பழனிசாமி(45). விவசாயக் கூலித்தொழிலாளியான இவா் தனது மனைவி லட்சுமியுடன் சோ்ந்து, அருகில் வசிக்கும் கணவனை இழந்த பெண்ணின் வீட்டில் 7 பவுன் நகைகள், வெள்ளி கொலுசு உள்ளிட்ட பொருள்களை அண்மையில் திருடியுள்ளாா்.

இந்த வழக்கில் செந்துறை காவல்துறையினா் பழனிசாமி, அவரது மனைவி லட்சுமியை அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதனால் அவமானமடைந்த பழனிசாமியின் தந்தை ரங்கசாமி(75), கடந்த சில தினங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்தாா். இந்நிலையில் தனது வீட்டின் அருகேயுள்ள காட்டுப் பகுதியிலிருந்த மரத்தில் தூக்கிட்ட நிலையில் புதன்கிழமை அவா் சடலமாகக் கிடந்தாா்.

ADVERTISEMENT

தகவலறிந்த செந்துறை காவல் துறையினா் நிகழ்விடம் சென்று சடலத்தைக் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT