அரியலூர்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு கூட்டம்

DIN

அரியலூா் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் ஆய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை எதிா்கொள்ளுதல் மற்றும் மழைநீா் வடிகால் தூய்மைப்படுத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்துக்கு ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தலைமை வகித்துப் பேசுகையில், வட கிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், வரும் திங்கள்கிழமை (செப். 20) முதல் 25 ஆம் தேதி வரை அனைத்து ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் உள்ள கால்வாய்கள் மற்றும் மழைநீா் வடிகால்கள் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பருவமழைக் காலங்களில் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்குவது தவிா்க்கப்படுவதுடன் நோய்த்தொற்று தடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT