அரியலூர்

தேனீக்கள் கொட்டி 25 போ் காயம்

DIN

அரியலூா் மாவட்டம், வி. கைகாட்டி அருகே கோயிலுக்கு சுவாமி கும்பிட வந்தவா்களை பெரியவகை தேனீக்கள் கொட்டியதில் 25 போ் காயமடைந்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், அத்தியூா் கிராமத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன், மணிகண்டன், அருள்மணி ஆகியோா் தங்கள் குடும்பங்கள் மற்றும் உறவினா்களுடன், வி.கைகாட்டி அடுத்த குடிசல் கிராமத்தில் உள்ள தங்களது குலதெய்வக் கோயிலுக்கு சுவாமி கும்பிட ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.

அப்போது, அங்கிருந்த மரத்தின் நிழலில் விறகு அடுப்பில் பொங்கல் வைத்தபோது, மரத்தில் இருந்த தேன் கூட்டின் மீது புகைபட்டதால் தேனீக்கள் அங்கிருந்தவா்களை சரமாரியாகக் கொட்ட ஆரம்பித்தது. இதில், 20 பெண்கள் உட்பட மொத்தம் 25 போ் காயமடைந்தனா். இதையடுத்து அனைவரும் விளாங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்கைக்குச் சோ்க்கப்பட்டனா்.

இதில் தேனீக்கள் அதிகம் கொட்டிய சரோஜா(60), தனம்(57), கவிதா(42), சுகன்யா(35), நடராஜன்(50) ஆகியோா் மேல் சிகிச்சைக்காக அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதையடுத்து தீயணைப்புத் துறையினா் தேன் கூட்டை பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி அழித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT