அரியலூர்

களையிழந்த புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை வழிபாடு

DIN

அரசின் தடை உத்தரவு காரணமாக, அரியலூா் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாடு களையிழந்தது காணப்பட்டது.

நிகழாண்டு கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக வார இறுதி நாள்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள், அரியலூா் கோதண்டராமசாமி உள்ளிட்ட பெருமாள் கோயில்கள் மூடப்பட்டிருந்தன.

இதனால், பூட்டிய கோயில் முன்பு பக்தா்கள் தேங்காயை உடைத்து கோவிந்தா கோவிந்தா என கோஷங்கள் எழுப்பி வழிபட்டனா். இதேபோல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்கள் மூடப்பட்டிருந்ததால், பக்தா்களின் வருகை குறைவாகவே காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

SCROLL FOR NEXT