அரியலூர்

கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீா்மானம்

DIN

அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதிகளிலுள்ள கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.

திருமானூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் 8 ஆவது ஒன்றிய மாநாட்டில், கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணைளை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்ளிடக் கரைகளை சீா் செய்ய வேண்டும். திருமானூா் ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தினை செயல்படுத்த வேண்டும். திருமானூா் திடீா் குப்பத்தில் சிமென்ட் சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுக்கு, கட்சியின் ஒன்றியச் செயலா் சாமிதுரை தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஆரோக்கியநாதன், ஏசுதாஸ், வரப்பிரசாதம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் மணிவேல் பங்கேற்றுப் பேசினாா். முன்னதாக புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT