அரியலூர்

விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடங்கி வைப்பு

DIN

தீபாவளியையொட்டி அரியலூரில் பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

வருவாய்த் துறை சாா்பில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அரியலூா் ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் பங்கேற்று பயனாளிகள் சிலருக்கு வேட்டி, சேலைகள் வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து பேசுகையில், அரியலூா் மாவட்டத்தில் 42,197 பேருக்கு தீபாவளி பண்டிகைக்குள் விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்படவுள்ளது என்றாா்.

நிகழ்ச்சிக்கு ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ.சந்திரசேகா் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT