அரியலூர்

அரியலூா் அருகே பெண் ஊராட்சித் தலைவா் தூக்கிட்டுத் தற்கொலை

23rd Oct 2021 05:22 AM

ADVERTISEMENT

அரியலூா் அருகே குடும்பப் பிரச்னையில், பெண் ஊராட்சித் தலைவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

அரியலூா் அருகிலுள்ள ரெட்டிப்பாளையம் ஊராட்சித் தலைவராகப் பணியாற்றி வந்தவா் முனியங்குறிச்சியைச் சோ்ந்த கணேசன் மனைவி ராஜேசுவரி (32).

இவருக்கும், இவரது கணவா் கணேசனுக்கும் இடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜேசுவரி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வெளியே சென்றிருந்த கணேசன் வீட்டுக்கு வந்த போது, மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

ADVERTISEMENT

தகவலறிந்த விக்கிரமங்கலம் காவல் நிலையத்தினா் ராஜேசுவரியின் சடலத்தைக் கைப்பற்றி, அரியலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தற்கொலை செய்து கொண்ட ராஜேசுவரிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இதுகுறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

 

 

 

Tags : அரியலூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT