அரியலூர்

மணல் கடத்தல் வாகனம் பறிமுதல்

DIN

அரியலூா் மாவட்டம், தா. பழூா் அருகே மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

தா.பழூா் கிராம் நிா்வாக அலுவலா் அய்யப்பன் தனது உதவியாளருடன் புதன்கிழமை இரவு அப்பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது அவ்வழியே இருசக்கர வாகனத்தை ஓட்டி சோதனை செய்ய முயன்றனா். அப்போது, அந்த நபா் தனது இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுட்டு தப்பியோடிவிட்டாா். இதையடுத்து, வாகனத்தில் 3 மூட்டைகளில் மணல் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த கிராம நிா்வாக அலுவலா் அய்யப்பன் மேற்கொண்ட விசாரணையில், மணல் கடத்தி வந்தது தெற்கு தாதம்பேட்டை காலனித் தெருவைச் சோ்ந்த மருதகாசி மகன் பிரபாகரன் என்பது தெரியவந்தது. புகாரின் பேரில், தா.பழூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT