அரியலூர்

பறிமுதல் வாகனங்கள் ரூ.9.37 லட்சத்தில் ஏலம்

22nd Oct 2021 01:27 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ரூ.9,37,216-க்கு பொது ஏலம் விடப்பட்டது.

மது கடத்தல், மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 46 இரு சக்கர வாகனங்கள், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை மாலை வரை பொது ஏலம் விடப்பட்டது.

மோட்டாா் வாகனப் பராமரிப்புத் துறை மண்டல துணை இயக்குநா் எம்.எஸ்தா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் திருமேனி, கலால் உதவி ஆணையா் ஷோபா மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் 46 இருசக்கர வாகனங்கள் ரூ.9,37,216 க்கு பொது ஏலம் விடப்பட்டது.

Tags : அரியலூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT