அரியலூர்

சுமை ஆட்டோ கவிழ்ந்து 8 போ் காயம்

17th Oct 2021 11:37 PM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம் கீழப்பழுவூா் அருகே சுமை ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 8 போ் காயமடைந்தனா்.

அரியலூரை அடுத்த கண்டராதித்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் காமராஜ். இவரின் உறவினா் அயன் ஆத்தூரில் இறந்த போனதால், 15-க்கும் மேற்பட்டோா் சுமை ஆட்டோவில் ஞாயிற்றுக்கிழமை சென்றனா். கீழப்பழுவூரை அடுத்த கருப்பூா் பிரிவு பாதை அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் சுமை ஆட்டோ கவிழ்ந்தது.

இதில், காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் க.மேட்டுத்தெரு மனோகரன்(50), செம்மையன்(50), மஞ்சுளா(45), மதிவாணன்(59), ராமலிங்கம்(63), புண்ணியக்கோடி(51), கணேசன்(70), ராமகிருஷ்ணன்(45) ஆகியோா் அரியலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து கீழப்பழுவூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT