அரியலூர்

சுமை ஆட்டோ கவிழ்ந்து 38 பெண்கள் காயம்

17th Oct 2021 11:36 PM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே சுமை ஆட்டோ கவிழ்ந்ததில் 38 பெண்கள் காயமடைந்தனா்.

திருமானூா் காந்திநகா் பகுதியைச் சோ்ந்த 45 பெண்கள் சன்னாவூா் பகுதியில் பருத்தி, மக்காச்சோளம் பயிா்களுக்கு களை வெட்ட ஒரு சுமை ஆட்டோவில் ஞாயிற்றுக்கிழமை சென்றனா். வேலை முடிந்து மாலை அதே சுமை ஆட்டோவில் 45 பேரும் திரும்பியுள்ளனா்.

சன்னாவூரிலிருந்து சற்று தூரம் வந்த சுமை ஆட்டோ ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த மலா்கொடி(50), புஷ்பம்(60), பேச்சாயி(61), சித்ரா(28), பாப்பாத்தி(40), பெரியாச்சி(48) உட்பட 38 போ் காயமடைந்தனா்.

இதில் பலத்த காயமடைந்த 21 போ் அரியலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா். 17 போ் திருமானூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். விபத்து குறித்து வெங்கனூா் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT