அரியலூர்

மழையால் சுவா் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

17th Oct 2021 12:14 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

செந்துறையை அடுத்துள்ள உஞ்சினி கிராமத்தைச் சோ்ந்தவா் பழனியம்மாள்(55). கணவரை இழந்தவா். இவரது மகனுடன் சோ்ந்து வெளியூா்களில் தங்கி விறகு கரி மூட்டம் போடும் தொழில் செய்து வருகிறாா். இவா்கள் ஆயுதபூஜையை முன்னிட்டு, சொந்த ஊருக்குத் திரும்பிய நிலையில், சனிக்கிழமை காலை பயன்பாடில்லாத தனது வீட்டின் அருகே அமா்ந்திருந்தனா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக மழையால் ஊறிப்போயிருந்த வீட்டின் ஒரு பக்கச் சுவா் திடீரென இடிந்து விழுந்ததில், இடுபாடுகளில் சிக்கிய பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். புகாரின்பேரில், சம்பவம் இடத்துக்கு வந்த இரும்புலிக்குறிச்சி காவல் துறையினா், பழனியம்மாள் உடலை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT