அரியலூர்

மதுக்கடைகளில் கேமரா: காவல் துறையினா் ஆலோசனை

17th Oct 2021 12:14 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், டாஸ்மாக் மதுக்கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்டக் காவல் கூடுதல் கண்காணிப்பாளா் எஸ்.திருமேனி தலைமை வகித்துப் பேசுகையில், மாவட்டத்தில் உள்ள 53 டாஸ்மாக் மதுக்கடைகள், மது அருந்தும் கூடங்கள், டாஸ்மாக் அருகேயுள்ள சாலைகள், வாகன நிறுத்தங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நிகழும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க அவசியம் மேற்கண்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், அரியலூா், பெரம்பலூா் ஆகிய மாவட்டங்களின் டாஸ்மாக் உதவி மேலாளா் பாரதிவளவன், டாஸ்மாக் கடை விற்பனையாளா்கள் மற்றும் மதுவிலக்கு காவல் பிரிவினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT