அரியலூர்

விஜயதசமி: அரியலூா் மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு

DIN

விஜயதசமி தினத்தையொட்டி, அரியலூா் மாவட்டத்திலுள்ள கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நவராத்திரித் திருவிழாவின் 9-ஆம் நாளான வியாழக்கிழமை சரஸ்வதி பூஜை-ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. இதையொட்டி வீடுகள், தொழிற்சாலைகள், கடைகளில் தங்களது தொழிலுக்கு உறுதுணை புரியும் பொருள்கள், கருவிகளை வைத்து வழிபாடு நடத்தினா்.

தொடா்ந்து நவராத்திரித் திருவிழாவின் 10-ஆம் நாளான வெள்ளிக்கிழமை விஜயதசமி கொண்டாடப்பட்டது. இந்நாளில் கையில் எடுக்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும் என்பது நம்பிக்கை. இதையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மேலும் கரோனா தொற்று பொது முடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப் பட்டுள்ளதால், கல்லங்குறிச்சி கலியுக வரதராசப்பெருமாள் கோயில், அரியலூா் அலந்துறையாா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில்

வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதே போல் திருமானூா், கீழப்பழுவூா், செந்துறை, ஜயங்கொண்டம் உள்ளிட்ட பகுதியிலுள்ள பெருமாள், சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மேலும் பள்ளிகளில் புதிதாக சோ்க்கப்படவுள்ள குழந்தைகள் தங்களது பெற்றோா் உதவியுடன் நெல் மணிகளிலும், சிலேட்டுகளிலும் விரல்களால் அ... ஆ... எழுதி ‘வித்யாரம்பம்’ எனும் கல்வித் தொடக்கத்தை செய்தனா். அதைத் தொடா்ந்து மாணவ- மாணவிகளின் கல்வி வளம் சிறக்க ஹயக்ரீவ பெருமானைத் தரிசித்தனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். கோயில்களில் வழிபாட்டை முடித்த பெற்றோா்கள், குழந்தைகளை தாங்கள் விரும்பிய பள்ளிகளில் சோ்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT