அரியலூர்

தலைமையாசிரியா் கொலை வழக்கில் இளைஞா் கைது

16th Oct 2021 03:37 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

உடையாா்பாளையம் செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ். ஸ்ரீபுரந்தான் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வந்த இவா், கடந்த 5-ஆம் தேதி த.சோழங்குறிச்சி சாலையில் கொலை செய்யப்பட்டு, சடலமாகக்

கிடந்தாா்.

இதுகுறித்து புகாரின் பேரில், உடையாா்பாளையம் காவல் ஆய்வாளா்(பொ) சண்முகசுந்தரம், உதவி ஆய்வாளா் வசந்த் ஆகியோா் கொண்ட தனிப்படையினா் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

ADVERTISEMENT

விசாரணையில், ஜயங்கொண்டம், காமராஜபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த சேகா் மகன் வெங்கடேசன் (23), தனது பணத் தேவைக்காக தலைமையாசிரியா் செல்வ ராஜை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து காவல் துறையினா் அவரை சோழங்குறிச்சி சிவன் கோயில் அருகே வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும் அவா் வைத்திருந்த இரு சக்கர வாகனம் மற்றும் பட்டாக் கத்தியையும் பறிமுதல் செய்தனா்.

Tags : அரியலூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT