அரியலூர்

அரியலூா் மாவட்டத்தில் நாளை 300 இடங்களில் சிறப்பு முகாம்

9th Oct 2021 12:21 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்.10) 300 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது என்றாா் ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி.

அரியலூா் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

மாவட்டத்தில் கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுகிழமை

தோறும் நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களின் மூலம் முதல் வாரத்தில் 47,125 பேருக்கும், இரண்டாவது வாரத்தில் 17,944 பேருக்கும், மூன்றாவது வாரத்தில் 50,941 பேருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முகாமை 300 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை கா்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கு 100 சதவிகிதம் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தை 100 சதவிகிதம் கரோனா தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக மாற்ற, அனைத்துத் தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜெய்னுலாப்தீன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT