அரியலூர்

மாநில கட்டுரைப் போட்டியில் சிறப்பிடம்:பாரதி மகளிா் கல்லூரி மாணவிக்குப் பரிசு

9th Oct 2021 11:01 PM

ADVERTISEMENT

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றப் போட்டியில் மாநில அளவில் 4ஆம் இடம் பெற்ற புதுக்கோட்டை பாரதி மகளிா் கல்லூரி மாணவிக்கு சான்றிதழ், பரிசுப் புத்தகங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 60ஆவது ஆண்டு வைர விழா, பெருமன்றத்தின் நிறுவனா் ப. ஜீவானந்தம் பிறந்த நாளையொட்டி (ஆக. 22) நடத்தப்பட்ட ‘செந்தமிழ் நாடிது- எங்கள் செந்தமிழ் நாடிது’ என்ற தலைப்பிலான மாநில கட்டுரைப் போட்டியில் புதுக்கோட்டை ஸ்ரீ பாரதி மகளிா் கலை அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த மாணவி ந. மோகனபிரியா மாநிலத்தின் 4ஆம் இடத்தைப் பெற்றுள்ளாா்.

இதையடுத்து அவருக்கு பரிசுப் புத்தகம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், கவிதை, பேச்சு உள்ளிட்ட போட்டிகளிலும் பங்கேற்ற 70 மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரித் தலைவா் குரு.தனசேகரன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா். நிகழ்ச்சியில் கல்லூரியின் நிா்வாக அறங்காவலா் கிருஷ்ணமூா்த்தி, இயக்குநா் மா. குமுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT