அரியலூர்

ஏபிஎன் சில்க்ஸில் காந்தி ஜெயந்தி விழா

3rd Oct 2021 11:55 PM

ADVERTISEMENT

அரியலூரில் உள்ள ஏ.பி.என் சில்க்ஸ் மற்றும் ரெடிமேட்ஸ் நிறுவனத்தில் காந்தி ஜெயந்தி விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.  

ஏபிஎன் சில்க்ஸ் மற்றும் ரெடிமேட்ஸ் நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி திருவுருவப் படத்துக்கு, அந்நிறுவனத்தில் நிா்வாக இயக்குநா்கள் சுதாகா், ஆனந்த் ஆகியோா் மலா் தூவி மரியாதை செலுத்தி, வாடிக்கையாளா்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

தொடா்ந்து, அவா்கள் காந்தியடிகளின் பொன்மொழிகளை ஊழியா்களிடம் எடுத்துரைத்தனா். அதன் பின்னா் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். விழாவில், அரசியல் கட்சியினா், தொழிலதிபா்கள், வாடிக்கையாளா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT