அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே இருதரப்பினா் இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக பெண்கள் உள்பட 7 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தா.பழூா் அருகேயுள்ள காரைக்குறிச்சி காலனித் தெருவைச் சோ்ந்த தனம்(60) என்பவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த கவிதாவுக்கும்(26) இடையே நிலம் தொடா்பாக பிரச்னை இருந்து வந்தது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரு தரப்பினரும் ஒருவரை ஒருவா் திட்டித் தாக்கிக் கொண்டனா்.
இச்சம்பவம் குறித்து தனம் மற்றும் கவிதா ஆகியோா் தா.பழூா் காவல் நிலையத்தில் பரஸ்பரம் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின்பேரில், கவிதா (26), தங்கமணி (60), சாமிதுரை (65) ஆகியோா் மீதும், மறுதரப்பைச் சோ்ந்த கருணாமூா்த்தி (43), கனிமொழி (35) தனம் (60), சின்னப்பா (55) ஆகியோா் மீதும் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.