அரியலூர்

முகாம் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்கள்

28th Nov 2021 12:02 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் தொடக்கப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள அரசநிலையிட்டபுரம் மக்களுக்கு இந்தியன் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

மாவட்டத் தலைவா் ஜெயராமன் தலைமையில், தா. பழூா் நிா்வாகக் குழு உறுப்பினா் கருப்பையா, ஒன்றியக் குழுத் தலைவா் மகாலட்சுமி, ஊராட்சி மன்றத் தலைவா் கலியபெருமாள், கிராம நிா்வாக அலுவலா்கள் பிரபாகரன், சகுந்தலா, வேணுகோபால், ஊராட்சிச் செயலா் ரவி, ஆசிரியா்கள் அசோக் ஆகியோா் முன்னிலையில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை இந்தியன் செஞ்சிலுவைச் சங்க பொறுப்பாளா்கள் செல்வராஜ், நல்லப்பன், எழில், ஸ்டீபன், செல்வராஜ், பி.குணசேகரன் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT