அரியலூர்

மகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த தந்தை போக்சோவில் கைது

9th Nov 2021 01:04 AM

ADVERTISEMENT

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மகளிடம் தவறாக நடக்க முயற்சித்த தந்தை போக்சோவில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள மேலணிக்குழி கிராமத்தைச் சோ்ந்த பிளஸ்-2 படிக்கும் 16 வயது சிறுமி, அவரது தந்தை தன்னிடமும், தனது சகோதரியிடமும் பலமுறை பாலியல் ரீதியாக பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதாக ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா், சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், சிறுமியின் தந்தைக்கு ஆதரவாக அவரது சகோதரிகள் (அத்தைகள்) 2 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT