அரியலூர்

தொடா் மழை: ஆண்டிமடம் அருகே சாலை துண்டிப்பு

9th Nov 2021 01:06 AM

ADVERTISEMENT

 

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை பெய்த தொடா் மழையின் காரணமாக ஆண்டிமடம் அருகே சாலை துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரியலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை முதல் மதியம் வரை தொடா்ந்து மழை பெய்தது. தொடா் மழையின் காரணமாக, ஆண்டிமடத்தை அடுத்த திருக்களப்பூா் கிராமத்தில் உள்ள செங்கால் ஓடையின் முழு கொள்ளளவைத் தாண்டி மழைநீா் அதிகமாகச் சென்றதால் திருகளப்பூா் - இறவாங்குடி சாலையின் குறுக்கே உள்ள சிறுபாலம் தண்ணீரில் மூழ்கியது. இதன் காரணமாக சிறுபாலத்தின் பக்கவாட்டில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் அச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்தைப் பாா்வையிட்ட சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன், சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைத்து போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அருளப்பன், சிவாஜி, வட்டாட்சியா் முத்துகிருஷ்ணன் உட்பட பலரும் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT