அரியலூா் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞா்களை முதல் தலைமுறை தொழில்முனைவோராக உருவாக்கும் வகையில் புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பட்டப் படிப்பு, பட்டய படிப்பு, தொழிற்கல்வி முடித்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினா் 5 வயதுக்குள்ளும், பி.சி., எம்.பி.சி., பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினா் 45 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். 25 சதவிகிதம் மானியத்துடன் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையில் கடன் பெற பரிந்துரை அளிக்கப்படும்.
புதிய தொழில்முனைவோா் திட்டத்தின் கீழ் கடன் பெற தளா்வு, சலுகைகள் வழங்கப்பட உள்ளது. இந்த ஆணையானது 02.09.2021 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, பொது மேலாளா், மாவட்டத் தொழில் மையம், வாலாஜா நகரம், அரியலூா் அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 04329 - 228555, 89255 33925, 89255 33926 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.