அரியலூர்

விவசாயம், கலைகளைக் காக்க கரகாட்டம் ஆடிய படி நடவு நட்ட மாற்றுத்திறனாளி மாணவி

15th Jan 2021 06:28 PM

ADVERTISEMENT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே விவசாயம் மற்றும் கலையினை காக்க வலியுறுத்தும் வகையில் கரகாட்டம் ஆடியபடி மாணவி ஒருவர் நடவு வயலில் இறங்கி நடவு நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

பெரியதிருக்கோணம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன், மாலா தம்பதியினரின் மகள் கிருஷ்ணவேணி(15). வாய் பேசமுடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவியான இவர், ஜெயங்கொண்டத்தில் உள்ள காதுகேளாதோர் தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர், விவசாயம் காக்க வேண்டும், கலைகள் காக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தலையில் கரகம் வைத்து ஆடிக்கொண்டே வயலில் இறங்கி வெள்ளிக்கிழமை நாற்றுகளை நட்டார்.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கரகாட்டம் ஆடிக்கொண்டே நடவு நட்டதை விவசாயிகள் மற்றும் பொது மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். தொடர்ந்து மாணவியை பலரும் பாராட்டினர்.

ADVERTISEMENT

மாணவியின் தந்தை பாண்டியன் அரசு வாகன ஓட்டுநராகவும், தாய் மாலா காதுகேளாதோர் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இதுகுறித்து மாணவியின் மாலா கூறுகையில், விவசாயம், கரகாட்டம் உள்ளிட்ட கலைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக கடந்த இரண்டு நாட்களாக வயலில் இறங்கி இந்த பயிற்சியினை மேற்கொண்டுள்ளார். மேலும், இந்தியா புக்ஆப் ரெக்கார்டு பெறவும் இந்த முயற்சி செய்துள்ளோம் என்றார்.

Tags : Ariyalur
ADVERTISEMENT
ADVERTISEMENT