அரியலூர்

அரியலூா்: 130 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை

DIN

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் 130 வாக்குச் சாவடிகள் மையங்கள் பதற்றமானவை என ஆட்சியா் த.ரத்னா தெரிவித்தாா்.

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு அவா் சனிக்கிழமை செய்தியாளா்களை சந்தித்து அளித்த பேட்டி: தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அரியலூா் மாவட்டத்தில் அரியலூா்(376), ஜயங்கொண்டம்(377) பகுதிகளில் 753 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், அரியலூா் (78), ஜயங்கொண்டம்(52) என 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. இதேபோல், மாவட்டத்தில் 10,202 மாற்றுத்திறனாளிகள், 80 வயது நிறைவடைந்த 11,528 வாக்காளா்களும் அஞ்சல் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தோ்தல் பணியில் 53 மண்டல அலுவலா்கள் தலைமையில் 4,556 அலுவலா்கள் ஈடுபட உள்ளனா் என்றாா்.

பேட்டியின் போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜெய்னுலாப்தீன், கோட்டாட்சியா்கள் ஏழுமலை, ரவிச்சந்திரன் (பொ), தோ்தல் வட்டாட்சியா் கு.குமரய்யா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT