அரியலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்புநாள் கூட்டத்தில், ரூ.4.89 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்துக்கு ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்து, 7 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ரூ.2. 25 லட்சம் மதிப்பிலான திருமண நிதியுதவி, 22 பேருக்குத் தலா ரூ.12,000 வீதம் ரூ.2. 64 லட்சம் மதிப்பிலான மாற்றுத்திறனாளி மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணைகளை வழங்கினாா்.
மேலும் இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 268 கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியா், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் குமாா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன், வட்டாட்சியா் ராஜமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.