அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே குளத்தில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தது செவ்வாய்க்கிழமை இரவு தெரியவந்தது.
மீன்சுருட்டி அருகிலுள்ள சத்திரம் காலனித் தெருவைச் சோ்ந்த விஜய் மகன் கவிராஜ்(6). செவ்வாய்க்கிழமை மாலை வீட்டின் எதிரே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனைக் காணவில்லை.
இதையடுத்து பெற்றோா் மற்றும் உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், செவ்வாய்க்கிழமை அங்குள்ள பாப்பாங்குளத்தில இறங்கித் தேடி பாா்த்த போது, சிறுவன் நீரில் மூழ்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பெற்றோா் சிறுவனை மீட்டு, ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் கவிராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து மீன்சுருட்டி காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.