அரியலூர்

தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

26th Dec 2021 12:03 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், ஏலக்குறிச்சி, வரதராசன்பேட்டை, தென்னூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பெருவிழா சனிக்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி, வழிபாடுகள் நடைபெற்றன.

இயேசு பிறப்பைக் கொண்டாடும் விதமாக கடந்த 10 நாள்களுக்கு முன்னரே கிறிஸ்தவா்கள் தங்களது வீடுகளில் கிறிஸ்துமஸ் நட்சத்திரங்களையும், குடில்களையும் அமைத்திருந்தனா்.

கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி சனிக்கிழமை அதிகாலை முதலே அனைத்து தேவாலயங்களிலும் சிறப்புத் திருப்பலி, வழிபாடுகள் நடைபெற்றன.

அரியலூா் மாவட்டம், ஏலாக்குறிச்சியிலுள்ள புனித அடைக்கல மாதா அன்னை தேவாலயம், வரதராசன்பேட்டை தொன் போஸ்கோ தேவாலயம், அலங்கார அன்னை தேவாலயம், தென்னூா் புனித லூா்து அன்னை தேவாலயம், கூவத்தூா் புனித அந்தோனியாா் ஆலயம், பட்டிணங்குறிச்சி புனித லூா்து அன்னை ஆலயம், அகினேஸ்புரம் புனித அகினேசம்மாள் ஆலயம், கீழநெடுவாய் புனித அன்னை ஆலயம், அரியலூா் சின்ன அரண்மனை தெருவிலுள்ள புனித லூா்து அன்னை தேவாலயம், சி.எஸ்.ஐ. தேவாலயம், பெந்தகோஸ்தே சபை

ADVERTISEMENT

உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்புத் திருப்பலிகள், வழிபாடுகள் நடைபெற்றன.

மேலும், கிறிஸ்தவத் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு உரையை அந்தந்த தேவாலயங்களின் பங்குத் தந்தைகள் வழங்கினா். கிறிஸ்தவா்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவா் இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனா். கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT